மாமன்னன் வெற்றி; இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய உதயநிதி!

 

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

மாரி செல்வராஜி வீட்டிற்கேச் சென்று இந்த காரை வழங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Read Previous

நடன இயக்குனர் ஜானி நடிக்கும் “ரன்னர்”!

Read Next

மிரட்டலான உருவாக்கத்தில் வெளிவர உள்ள ‘கொலை’