டிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்த ‘பிகில்’ படம் பொங்கலை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பானது.

இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் சாதனையை ‘பிகில்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ‘சர்க்கார்’ சாதனையைக் கூட முறியடிக்க முடியாமல் 5வது இடத்தையே ‘பிகில்’ ரேட்டிங் பிடித்துள்ளது.

‘விஸ்வாசம்’ படம் கடந்த வருடம் ஒளிபரப்பானது. அப்போது அந்தப் படத்தின் ரேட்டிங், 1,81,43,000 பதிவுகளாக அமைந்து புதிய சாதனையைப் படைத்தது.

அதுவரை முதலிடத்தில் இருந்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் பதிவான 1,76,96,000 எண்ணிக்கையை முறியடித்தது.

இப்போது ‘பிகில்’ படம் 1,64,73,000 பதிவுகளை மட்டுமே பெற்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் 1,69,06,000 பதிவுடன் ‘சர்க்கார்’ படமும், நான்காவது இடத்தில் 1,67,66,000 பதிவுடன் ‘சீமராஜா’ படமும் உள்ளன.

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொள்ள இப்போது புதிய காரணம் ஒன்று கிடைத்துள்ளது.

Read Previous

DAGAALTY OFFICIAL TEASER | Santhanam | Ritika Sen | Yogi Babu | Vijay Anand

Read Next

வானம் கொட்டட்டும் – டிரைலர்

Most Popular