டாக்சிக் – ருக்மிணி வசந்த் கதாபாத்திரம் அறிமுகம்

வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’

படத்தின் கதாபாத்திர அறிமுக வரிசையில், மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

‘கேஜிஎப் 2’ படத்திற்குப் பிறகு யஷ் நடிக்கும் படம் இது.

முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca), ஆகியோரின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்திருந்தனர்.

இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறுகையில்,

“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் அறிவாற்றல். அவர் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை,  அவர் ஆழமாக சிந்திக்கிறார். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறார். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது.  சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும்  மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவர் நினைவூட்டுகிறார். காட்சிகளுக்கு இடையில், அவர் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறார். அந்தக் கணங்களே அவரின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவர் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறார். அவரின் அணுகுமுறை மிகுந்த சிந்தனையுடையது  சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவர் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என்று கூட எனக்கு ஆசை வருகிறது,” என்றார்.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

Read Previous

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா

Read Next

‘பராசக்தி’ மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் – அதர்வா