சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ‘திட்டம் இரண்டு’.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள விதத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது படம் இது.
'Yours Shamefully' என்ற குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இந்தப் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
‘மான்ஸ்டர், பண்ணையாரும் பத்மினியும், மாஃபியா’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். “குற்றம் கடிதல், மகளிர் மட்டும், ஹவுஸ் ஓனர்” படங்களின் எடிட்டிர் பிரேம் குமார் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.
“மரகத நாணயம், சிக்ஸர்” ஆகிய படங்களின் ஆர்ட் டைரக்டர் ராகுல் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.
ஏற்கெனவே முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு கொரானோ ஊரடங்கு முடிந்ததும் ஆரம்பமாகும்.