மீண்டும் தாமதமாகும் ‘தங்கலான்’ வெளியீடு

‘தங்கலான்’ படத்தின் வெளியீடு மீண்டும் தாமதமாகும் என தெரிகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.

முதலில் ஜுன் வெளியீடு என்று இறுதிகட்டப் பணிகளை வேகப்படுத்தியது. ஆனால், இப்போது ஜுன் வெளியீடு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. பெரும் பொருட்செலவிலான படம் என்பதால், ‘தங்கலான்’ படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது படக்குழு.

அனைத்து மொழிகளிலும் வெளியீடு என்பதால், விளம்பர திட்டமிடலை அதற்கு ஏற்றார் போல் வடிவமைத்துள்ளார்கள். மேலும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான உடன் தான், ‘தங்கலான்’ வெளியீடு குறித்த இறுதிமுடிவினை படக்குழு எடுக்கவுள்ளது.

இப்போதைக்கு ஆகஸ்ட் மாதத்தில் எந்த தேதி சரியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்திருக்கிறார் ஞானவேல்ராஜா.’தங்கலான்’ வெளியீட்டை முடித்துவிட்டு, ‘கங்குவா’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை துவக்கி தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Read Previous

கார்த்திக் சுப்புராஜின் வேகம்: சூர்யா சந்தோஷம்

Read Next

கட்சியினருக்கு கடும் நிபந்தனைகளை விதித்த விஜய்

Most Popular