விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ கொண்டாட்டம்

மணி ஒன்பது ஆனவுடன் தினமும் பிக் பாஸ் பார்க்கும் பழக்கம் பலருக்கு இருந்தது.

‘பிக் பாஸ்’ முடிந்து சில நாட்கள்ஆகிவிட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியைப் பெரும்பாலானோர் மிஸ் செய்கிறார்கள்.

இதன் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சிகளுக்கு புது வரவு என்றாலும் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்திய அளவில் சோசியல் மீடியாக்களிலும் வைரலாகியது. இப்படிக் கிடைத்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிக் பாஸ் நட்சத்திரங்கள் ஒரு குடும்பமாக ஒன்று கூடிக் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தான் இந்த ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’.

பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரையும், மீண்டும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க பலருக்கும் ஆசைதான். அதனால் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஓவியா, ஆரவ், ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி, வையாபுரி, காயத்ரி ரகுராம், ரைசா, சினேகன், பரணி, ஷக்தி, ஹாரதி, கஞ்சா கருப்பு, சுஜா வருணி, கணேஷ் வெங்கட்ராம், காஜல், ஜூலியானா மற்றும் அனுயா ஆகியோரும் இந்த ‘பிக் பாஸ்’ கொண்டாட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களான கோபிநாத், ரியோ, மா கா பா , ராஜா ராணி தொடர் ஆலியா மானசா, சஞ்சீவ், ரக்ஷன், ஜாக்லின், பாவனி ரெட்டி, மகேஷ் மற்றும் சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து பல கண்கவர் நிகழ்ச்சிகளைக் கொடுக்க உள்ளனர் .

பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்துப் பல மகிழ்ச்சி நிறைந்த டாஸ்க்குகளும் நடத்தப்படும்.

வரும் ஞாயிறு அக்டோபர் 15ம் தேதி மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

இப்படை வெல்லும் – ஜுக் பாக்ஸ் – பாடல்கள்

Read Next

மீண்டும் நடிக்க வரும் ‘நல்லெண்ணெய்’ சித்ரா

Most Popular