நகைச்சுவை நாயகர்களை அங்கீகரிக்கும் ஒரு விருது நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடத்தியுள்ளது விஜய் டிவி. அந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிதான் ‘காமெடி அவார்ட்ஸ்’.
பல நகைச்சுவை நடிகர்கள் ஒன்று கூட உள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியாக அமைந்த இந்த நிகழ்வு சமீபத்தில் சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியுள்ளார். சிறந்த நகைச்சுவை வசன எழுத்தாளர், சிறந்த நகைச்சுவை துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த நகைச்சுவை வில்லன் என பல விருதுகள் விழழவில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சூரி, ரோபோ ஷங்கர், சதீஷ், டேனியல் போப், யோகி பாபு, முனீஷ்காந்த், சீனியர் நடிகர்களான செந்தில், ஆனந்த் ராஜ், கிரேசி மோகன், M.S. பாஸ்கர் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சமீபத்தில், இணையத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மா கா பா, நிஷா மற்றும் ஆர்த்தி சேர்ந்து கலக்கிய அதிரடி நகைச்சுவை நடனமும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. நகைச்சுவை நாயகர்களின் பிரபலமான பல பாடல்களை சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் பாடி மகிழ்விக்கிறார்கள்.
நகைச்சுவை, கொண்டாட்டம், கலந்த பல உணாச்சி மிகு தருணங்களைக் கொண்ட இந்த ‘காமெடி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.