விஜய் டிவியில் மே 20 ‘காலா’ இசை விழா ஒளிபரப்பு

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு கடந்த மே 9ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், தனுஷ், மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சந்தோஷ் நாராயணன் வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சி, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் பரபரப்பான பேச்சு ஆகியவை அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.

அந்த மாபெரும் இசை வெளியீட்டு விழா விஜய் டிவியில் வரும் மே 20 அன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

கனா – சலன சுவர் படம்

Read Next

‘காளி’ படத்தில் அறிமுகமாவது பெருமை – ஷில்பா மஞ்சுநாத்