விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி

விஜய் டிவியில் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்க போவது யாரு 8’ தொடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘ராமர் வீடு’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

இதுவரையில் ராமர் “சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி’ என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் நாயகனாக ராமர் தான் இருக்கப் போகிறார். அவருடைய வீட்டில் ராமர், அவருடைய மனைவி அறந்தாங்கி நிழா, மகனாக ஆதிஷ் (ஜட்டி ஜெகன்னாதன்), அம்மாவாக யோகி, பக்கத்து வீட்டுக்காரராக மகாபா ஆனந்த் என ஒரு வீட்டை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி கலகலகப்பாக இருக்கப் போகிறது.

வரும் பிப்ரவரி 3 முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில், மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

சார்லி சாப்ளின் 2 – சின்ன மச்சான்…. பாடல் வீடியோ…

Read Next

மிக மிக அவசரம் – டிரைலர்

Most Popular