சன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்

அவ்னி டெலி மீடியா தயாரிப்பில், ஏ.ஜவஹர் இயக்கத்தில் குஷ்பு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தொடர் லட்சுமி ஸ்டோர்ஸ்.

சுரேஷ், நட்சத்திரா, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ், சுதா ரவிச்சந்திரன், சுரேஷ், ஹுசைன் அஹ்மது கான், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .

சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தத் தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் குஷ்பு.

லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகாலிங்கம். இவருக்கு நான்கு மகன்கள். முதன் மகன் மனைவியாக உள்ளே வருகிறார் மகாலட்சுமி (குஷ்பு).

மகாலட்சுமி தனது அன்பயும் ,ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸுக்கும் தருகிறார்.

பாக்கியலட்சுமி (நட்சத்திரா) கடையில் வேலை செய்யும் பெண். சகுந்தலா தேவி (சுதா ரவிச்சந்திரன்) வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லட்சுமி ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

சகுந்தலாதேவி, லட்சுமி ஸ்டோர்ஸ் கடையை எப்படியாவது விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யலட்சுமிக்கும், ரவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் ஆரம்பமாகி தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Read Previous

நீயா 2 – டிரைலர்

Read Next

சகா – விமர்சனம்

Most Popular