பரபரக்க வைக்கும் திரில்லர் படம் “காட்டேஜ்”! 

 

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ்.  ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம்  விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. 

ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை  அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை,  அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ்.   சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும்  ஊட்டியில்  25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. 

Read Previous

மலையாள வெப் சீரிஸ் “கேரளா க்ரைம் ஃபைல்ஸ்”… டீசரை வெளியானது!

Read Next

டப்பிங் பணியை துவக்கிய “கிரிமினல்” படக்குழு!