பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’

கே 9 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஆர்யா, துஷாரா மற்றும் ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் பா.இரஞ்சித்.

இப்படத்திற்காக ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடிக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடிக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்தான உடற்கட்டோடு நடிக்கிறார்கள். பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர்  நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
பாடல்கள் கபிலன், அறிவு .

பாடல்களை கபிலன், அறிவு எழுத முரளி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்கிறார். 

இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதியிருக்கிறார்.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

பல சினிமா நடிகர்கள், நடிகைகள் அதைப் பாராட்டி வருகிறார்கள். 

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. மார்ச் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

டிசம்பர் 2ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

பிரபாஸ் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டப் படம் ‘சலார்’

Most Popular