தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் தடம் பதிக்கும் சாம் சிஎஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சிஎஸ். தமிழில் அவரது இசையில் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்போது அந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கும் அவரது பின்னணி இசை பாலிவுட் திரையுலகத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

’ஓர் இரவு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம். ‘விக்ரம் வேதா’ படத்திற்காக அவர் இசையமைத்த ‘தீம் இசை’ அவரை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது. அப்படத்தின் பின்னணி  இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களைக் கவர்ந்தார். ‘கண்ணம்மா’ மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.  மெலோடி பாடல்களில் இன்றைய ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருக்கிறார். 

‘கைதி, அடங்க மறு,  சாணி காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல்’ போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான  ‘ராக்கெட்ரி’ அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.

‘ராக்கெட்ரி’ வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்திப் பதிப்பு டிரைலர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

இசையமைப்பாளர் சாமுக்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS.

Read Previous

ஆஹா தமிழ் ஓடிடி இணைந்து தயாரிக்கும் புதிய படம் ஆரம்பம்

Read Next

கேப்டன் – விமர்சனம்