டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைக்கு முன்பாக தெலுங்கு தேசத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்ககையை கற்பனை கலந்து இந்தப் படத்தின் கதையாக அமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் டிவிவி தனய்யா கூறுகையில்,
“ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை சமயத்தில் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.