வேர்ல்டு பாக்ஸ் ஆபீஸ் நம்பர் 1, 500 கோடி வசூல், அடுத்தடுத்த சாதனைகளில் ஆர்ஆர்ஆர்

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படம் உலக அளவிலான திரைப்பட வசூலில் கடந்த வார இறுதி வசூலில் வேர்ல்டு பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

உலக அளவில் 21 பிரதேசங்களில் மட்டுமே வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் 6,32,09,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து கடந்த வார இறுதி வேர்ல்டு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 474 கோடி. கடந்த வாரம் வெளியான ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அதிக வசூலைப் பிடித்துள்ளது.

நேற்றைய திங்கள் கிழமை வசூலையும் சேர்த்தால் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

எட்டு வருடப் பயணம் ‘கேஜிஎப்’ – இயக்குனர் பிரசாந்த் நீல்

Read Next

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘காதல் காதல்தான்’

Most Popular