சித்தார்த் நடிக்கும் ‘ரௌடி & கோ’

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் ‘ரௌடி & கோ’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.

கார்த்திக் ஜி கிரிஷ் வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சித்தார்த் ஜோடியாக, ராஷி கண்ணா நடிக்கிறார். மற்றும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்ல்ஸ் வினோத் மற்றும் ’தனி ஒருவன்’ வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் ‘ரெளடி & கோ’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நிறைவு செய்து வருகிறது. 

 

Read Previous

பல கேள்விகள், சந்தேகங்களுக்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ்

Read Next

மோகன்லால் நடிக்கும் 367வது படம் ஆரம்பம்

Most Popular