வீனஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரூட்’ (ROOT – Running Out of Time) படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் ரஜினிகாந்த்திற்கு காண்பிக்கப்பட்டன. காட்சிகளைப் பார்த்த அவர், படக்குழுவின் முயற்சியை பாராட்டி, படத்திற்கு சிறப்பான வெற்றி கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு, முழு குழுவுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S, ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது அவர் எழுதி இயக்கும் முதல் படமாக ‘ROOT – Running Out of Time’ உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அவருடன் தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, ஒய்ஜி மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிவியல் மற்றும் கிரைம் த்ரில்லர் படமாக, ஆழமான உணர்வுகளையும் இணைத்து கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட ‘ROOT – Running Out of Time’ திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.