ஆபாசப்படத்தை கூச்சம் இல்லாமல் வெளியிடும் ராம்கோபால் வர்மா

தெலுங்கு, ஹிந்தியில் படங்களை இயக்கி சர்ச்சைக்குரிய இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ராம் கோபால் வர்மா.

இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள காரணத்தால் ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடும் முறை அறிமுகமானது.

ராம்கோபால் வர்மா சொந்தமாகவே ஒரு இணையதளத்தை ஆரம்பித்து அதில் படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

இம்மாதத் துவக்கத்தில் ‘கிளைமாக்ஸ்’ என்ற ஒரு ஆபாசப்படத்தை வெளியிட்டார். அடுத்து நாளை ‘நேக்டு நங்கா நக்னம்’’ என்ற மற்றுமொரு ஆபாசப்படத்தை வெளியிட உள்ளார்.

இப்படத்தின் டிரைலரை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டார். படத்தை பிரமோஷன் செய்ய அவருடைய டிவிட்டர் தளத்தில் ஆபாசமான சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பல சிறுவர், சிறுமியர்களும் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் இன்டர்நெட்டை அதிகம் உபயோகிக்கிறார்கள். உங்கள் குழந்தைகள் இம்மாதிரியான தளங்கள் பக்கம் செல்கிறார்களா என்பதை கவனமாகப் பாருங்கள்.

தணிக்கை பெற்ற பின் தியேட்டர்களில் ‘ஏ’ என்ற முத்திரையுடன் வெளியாக வேண்டிய இந்த மாதிரியான படங்களை எந்த வித சமூக சிந்தனையும் இல்லாமல் இப்படி இணையதளங்களில் வெளியிடுவது ஏ

ராம்கோபால் வர்மா போன்ற பொறுப்பற்ற இயக்குனர்கள் இத்துறையில் இருப்பது சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

Read Previous

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்

Read Next

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்