முதல்வர் நிவாரண நிதி – 50 லட்சம் கொடுத்த ரஜினிகாந்த்

கொரானோ தொற்றின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

பத்து நாட்களுக்கு முன்பு பதவியேற்ற திமுக அரசு கொரானோவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர் உள்ளிட்ட பலர் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்தனர்.

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயை வழங்கினார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியில் வந்து நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 

“தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று கேட்டுக் கொண்டார்.

நடிகர் விக்ரம், ஆன்லைன் பணப்பரிமாற்ற முறையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 30 லட்ச ரூபாய் வழங்கியுள்ளா

Read Previous

மே 17ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

மே 18ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular