சிம்ஹா நடிக்கும் ‘ராவண கல்யாணம்’ ஆரம்பம்

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ராவண கல்யாணம்’.

அறிமுக இயக்குநர் ஜே.வி. மது கிரண் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 

ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

நவம்பர் 4ம் தேதி வெளியாகும் ‘பனாரஸ்’

Read Next

யோகி பாபு நடிக்கும் த்ரில்லர் படம் ‘ஷு’ இசை வெளியீடு

Most Popular