‘ராவடி’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அனிருத்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க, விஷ்ணு குமார் இணை தயாரிப்பு செய்ய அறிமுக இயக்குனர்விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ராவடி’.

தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பஸில் ஜோசப், ‘சிறை’ படத்தில் அறிமுகமான அக்ஷய்குமார் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். 

காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை, மற்றும் கதாபாத்திர அறிமுக வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.

 

Read Previous

மலையாள சினிமாவின் மல்டிஸ்டார் படம் ‘பேட்ரியாட்’

Read Next

விஜய் தேவரகொன்டா, ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரணபலி’