பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம்

16 Jul 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ‘96, மெய்யழகன்’ படங்களுக்குப் பிறகு பிரேம்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரே சமயத்தில் 10 புதிய படங்களைத் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.  

சமீபத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தின் பூஜையை நடத்தினார்கள். தற்போது பிரேம்குமார் - விக்ரம் படத்தை அறிவித்துள்ளார்கள். 

ஏற்கெனவே சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜே சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படமும் தயாரிப்பில் உள்ளது.

 

Tags: prem kumar, vikram

Share via: