கவின், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்

16 Jul 2025

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்-  பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.  இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தை  திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களும், படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 

Tags: kavin, priyanka mohan

Share via: