யு டியூப் பிரபலம் ராகுல் இயக்கி நடிக்கும் படம்
17 Jul 2025
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் யு டியுப் பிரபலம் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
காமெடி நடிகராக பிரபலமான ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Tags: rahul, ms baskar