போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்த பிரபாஸ்

 நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார். அடுத்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இதனிடையே நடிகர் பிரபாஸ் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே ' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Previous

‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரானார் ஆரி அர்ஜுனன்

Read Next

நகைக்கடையில் கொள்ளை… “துச்சாதனன்” சொல்லும் கதை