தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ என தலைப்பு வைத்துள்ளார்கள்.
விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.