‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘பவுடர்’ திரைப்படத்தின் பாடலான ‘நோ சூடு நோ சொரணை’ கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியாகி இணையதளத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி கானா பாலா பாடியுள்ள இந்த பாடலுக்கு யூடியூபில் 10 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. மேல் கண்டு ரசித்துள்ளனர்.
விரைவில் பவுடர் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இசை லியாண்டர் லீ மார்ட்டி, நடனம் சுரேஷ் சிது, ஒளிப்பதிவு பிரகத் முனுசாமி. படத்தொகுப்பு குணா. தயாரிப்பு: கோவை எஸ் பி மோகன்ராஜ், ஜெயஸ்ரீ விஜய்