சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இப்படத்தின் ட்ரைலர் மே 21 அன்று வெளியாகி 3 நாட்களில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கு முன் ஜோதிகா, கார்த்தி நடித்த தம்பி படத்தின் ட்ரைலர் கூட இவ்வளவு பார்வைகளை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்மகள் வந்தாள் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததுள்ளது ஆச்சரியம் தான்.