பிச்சைக்காரன் 2’வை கைப்பற்றிய ஸ்டார் நெட்வொர்க்

விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும் நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் 'பிச்சைக்காரன்2' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், ”ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் எனக் கூறியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது என்பதையும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு 'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்த வருடம், 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

 

Read Previous

25 ஆண்டுகாலம் துறையில் நீடிப்பதே சாதனை தான் – அமைச்சர் சாமிநாதன்

Read Next

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த ”டிமாண்டி காலனி 2” படக்குழு