மே 19 அன்று வெளியாகிறது “பிச்சைக்காரன் 2”

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி' டிரெய்லர் ஏப்ரல் 29, 2023 அன்று வெளியானது. தற்போது அந்த ட்ரெய்லர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 

ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், 'பிச்சைக்காரன்' படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது. 

அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Read Previous

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: மாபெரும் வெற்றி பெற்ற ‘நலம் காக்கும் அணி’

Read Next

தெய்வ மச்சான் / Deiva Machan (2023)