திரைப்படமாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு

பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. 

ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', உள்ளிட்டஎன பல வெற்றி படங்களைத் தந்தவர்.

தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்கக் கூடியவராம்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் சிறு வயது முதல் பசும்பொன் தேவருடன்   அரசியலிலும் பங்கு பெற்ற சிஷ்யராவார். அவர் எழுதிய "முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" என்ற புத்தகம் மூலம் வரலாற்று உண்மைகள் படமாக்கப்பட உள்ளது.

முக்கிய வரலாற்றுத் தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு  விரைவில் தொடங்க உள்ளது.

Read Previous

கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்த படங்கள்

Read Next

திரைப்படமாகும் கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு

Most Popular