‘பருந்தாகுது ஊர்க் குருவி’, விரைவில் டிரைலர் வெளியீடு

லைட்ஸ் ஆன் மீடியா வழங்க, தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில்,

“கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். இந்தியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். 

ஊட்டி, முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் உடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தின் டிரைலர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Read Previous

‘ஒன் வே’ டிரைலர் வெளியீடு, குஷ்பு பாராட்டு

Read Next

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’