லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சேபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘பரிமளா அண்ட் கோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது. இந்தப் படம் த்ரில்லர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது.
சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கிறது கதை.
படத்தின் அறிவிப்புடன் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.