விக்ரம் பிரபு நடித்த படத்தைக் கைப்பற்றிய SP சினிமாஸ்

விக்ரம் பிரபுவின்  நடிப்பில் வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி  நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

Read Previous

சதிஷ் ஜோடியாகும் சிம்ரன் குப்தா

Read Next

ரன் பேபி ரன் – டிரைலர்

Most Popular