கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடுவது கடந்த மாதம் ஆரம்பமானது.
அமேசான் பிரைம் தளத்தில் கடந்த மாதம் 29ம் தேதி ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியிடப்பட்டது.
நேற்று ஜுன் 19ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படமும், ஜீ 5 தளத்தில் ‘யாதுமாகி நின்றாய்’ படமும் வெளியாகின.
இந்த மூன்று படங்களுமே கதாநாயகிகளை முன்னிலைப்படுத்திய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களை அடுத்து வரும் வாரங்களில் மேலும் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிற்கான அறிவிப்புகள் விரைவில் வரலாம்.
பெண்குயின் – டிரைலர்
யாதுமாகி நின்றாய் – டிரைலர்