கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரிக்க, அறிமுக இயக்குனர் பரத் தர்ஷன் இயக்கத்தில், பரத் மஞ்சிராஜு இசையமைக்க, திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் படத்திற்கு ‘ஓ சுகுமாரி’ என தலைப்பு வைத்துள்ளார்கள்.
‘ரசாகர் (Razakar) மற்றும் பொலிமேரா (Polimera) படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்க. கீரவாணியிடம் துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு ( Bharath Manchiraju) இப்படத்திற்கு இசையமைக்கிறார். திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.