ஹிந்தித் திரையுலகின் முக்கியமான ஹீரோயின்களில் ஒருவரான ராணி முகர்ஜி தற்போது ‘ஹிச்கி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மற்றும் போஜ்புரி ஆகிய 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார்கள்.
ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு வெளிவந்த ‘ஃபிரன்ட் ஆப் தக கிளாஸ்’ என்ற படத்தின் தழுவல்தான் இந்தப் படம்.
“ஹிச்கி’ திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் சாதாரண மனுஷியாகவும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சமூக பாடுபாடு, சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை அழுத்தமாகப் பதிய வைக்கும் இந்தப் படம். மக்களிடையே பலவீனத்தைக் குறைத்து அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு உத்வேகத்தை இந்தப் படம் கொடுக்கும். வாழ்க்கைக்குத் தேவையான குறிக்கோள், நெறிமுறைகள் ஆகியவற்றை இந்தப் படம் எடுத்துச் சொல்லும். முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்சிப்பேன்,” என்கிறார் ராணி.
ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோயைக் கொண்டிருக்கும் நினா மாதுர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நிலைமையிலும் வாழ்க்கையில் எப்படி போராடி வெல்ல வேண்டுமென்ற நல்ல கருத்தை இத்திரைப்படம் தெரிவிக்கவுள்ளது.
இத்திரைப்படத்தை சித்தார்த் P. மல்ஹோத்ரா இயக்கி , மனீஷ் ஷர்மா தயாரித்துள்ளார்.
பிப்ரவரி 23 அன்று ‘ஹிச்கி’ படம் வெளியாகிறது.