பாஃப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில், திரு இயக்கத்தில், சாம். சிஎஸ். இசையமைப்பில், கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் Mr சந்திரமௌலி.
கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து, இப்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக படமாக்கப்பட்ட ஒரு பாக்சிங் காட்சியில் நாயகன் கௌதம் கார்த்திக் 18 மணி நேரம் இடைவிடாமல் சண்டையிட்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய ஈடுபாட்டைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.