த்ரிஷா நடிக்கும் ‘குற்றப் பயிற்சி’

ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக G. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘குற்றப் பயிற்சி’.

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பறிவாளராக முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் திரிஷா. இப்படத்தில் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கொலையும், அந்தக் கொலையைப் பற்றிய விறுவிறுப்பான திரைக்கதையுமாக இப்படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில், படத்தின் முதன்மை கதாபாத்திரம், பெண் துப்பறிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டிட்- டைப் போல, த்ரிஷா கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

Read Previous

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படப்பிடிப்பு ஆரம்பம்

Read Next

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படப்பிடிப்பு ஆரம்பம்

Most Popular