‘காலா’ டீசர் சாதனைகள் என்ன ?

தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காலா’.

இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான 19 மணி நேரங்களில் இந்த டீசர் 71 லட்சம் பார்வைகளையும், 3 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. சுமார் 16500 கமெண்ட்டுகளும், 37 ஆயிரம் டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்தின் டீசர் தான் யு டியுபில் முதன் முதலில் தனிப் பெரும் சாதனையை நிகழ்த்திய டீசராக இருந்தது.

அதன் பின் வெளிவந்த ‘விவேகம், மெர்சல்’ ஆகிய படங்கள் யு டியூபில் அடுத்தடுத்து பல சாதனைகளைப் புரிந்தன.

தற்போது ‘மெர்சல்’ டீசர்தான் யு டியுப் வரலாற்றில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக இருக்கிறது. இந்த டீசருக்கு, 3 கோடியே 76 லட்சம் பார்வைகளும், 10 லட்சம் லைக்குகளும் இதுவரை கிடைத்துள்ளன.

‘கபாலி’ பட டீசரின் பார்வைகளைக் கடக்க மட்டுமே ‘மெர்சல்’ டீசருக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், லைக்குகுளை எளிதில் பெற்றுவிட்டனர். ‘கபாலி’ டீசர் தற்போது, 3 கோடியே 49 லட்சம் பார்வைகள், 4 லட்சத்து 68 ஆயிரம் லைக்குகளும் பெற்றுள்ளது.

‘கபாலி’ படத்தின் மொத்த லைக்குகளைக் கடக்க ‘காலா’ டீசருக்கு இன்னும் 1 லட்சத்து 68 ஆயிரம் லைக்குகுள் தேவை. ஆனால், 19 மணி நேரங்களுக்குள் 3 லட்சம் லைக்குகளை ‘காலா’ டீசர் கடந்துவிட்டது. மீதி லைக்குகளையும் இன்னும் சில நாட்களில் பெற்றுவிடும்.

இப்போதைக்கு ‘காலா’ டீசர், ‘கபாலி’ டீசரின் சாதனைகளை மிஞ்சிவிடும். அடுத்து ‘மெர்சல்’ சாதனையை மிஞ்ச வேண்டும்.

Read Previous

காலா – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – டீசர்கள்

Read Next

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ வடிவேலு வருவாரா, மாட்டாரா ?