பிரான்ஸ் – கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் தனுஷ் படம் ரிலீஸ்

தனுஷ் நடிக்க ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் தயாராகியுள்ள ‘The Extraordinary Journey of the Fakir’ படம் பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட உள்ளது.

இது பற்றிய சஸ்பென்ஸ் ஆன அறிவிப்பை அந்த தியேட்டர் அறிவித்துள்ளது.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், பெரின்சி பெஜோ, பர்காத் அப்டி, எரின் மொரியார்ட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தனுஷ் இந்தப் படத்தில் அஜாதசத்ரு லவாஷ் பட்டேல் என்ற தெரு மேஜிக்மேன் ஆக நடித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் ‘கபாலி, மெர்சல்’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மே 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

மீண்டும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி

Read Next

காலா – அனைத்துப் பாடல்கள் – ஆடியோ

Most Popular