சரிகம ஃபிலிம் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூட்லீ ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.
விஜயலட்சுமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டெவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் வரும் மே 25ம் தேதி வெளியாக உள்ளது.
படம் பற்றி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது,
“அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாதிரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும் போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொருத்திப் பார்த்தேன். அந்த கதாபாத்திரங்களில் அவர்கள் கச்சிதமாக பொருந்தியுள்ளார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்.
தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்கள் இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை, மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும் போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
கதாபாத்திரங்கள் சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்பு தான் முழுமையடைந்தது. அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கிக் கொடுத்தார்,” என்கிறார்.