நான் ஒரு இந்தியன், பாரதிராஜாவுக்கு விஷால் பதில்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் இருக்கிறார் நடிகர் விஷால். அவர் தேர்தலில் நின்ற சமயத்திலிருந்தே அவர் ஒரு தெலுங்கர் என்ற குற்றச்சாட்டு அவருடைய எதிராளிகளால் பரப்பப்பட்டு வந்தது. அந்த எதிர்ப்புகளையும் மீறி அவர் அந்த பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின் ஏதாவது அரசியல் செய்து அவரை அந்தப் பதவிகளிலிருந்து தூக்க வேண்டும் என்றும் சிலர் முயற்சித்தார்கள். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. அதனால், மீண்டும் அவரை ஒரு தெலுங்கர் என்று சொல்லி மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்கள்.

பாரதிராஜா உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் கடந்த வாரம் தமிழ்த் திரைப்பட சங்கங்களுக்கு தமிழர்கள்தான் பதவியில் இருக்க வேண்டும் என்றார்கள்.

அதுபற்றி விஷால் நேற்று கூறிய போது, “தெலுங்கர், தமிழர் என்று சொல்வதெல்லாம் எனக்கு அசிங்கமாக இருக்கிறது, நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறேன்,” என்று சொன்னார்.

விஷால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து இதுவரை பல படங்களைத் தயாரித்து தமிழ் தொழிளலார்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். படங்களே தயாரிக்காத சில தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டுவது எந்த நியாயம் என்றும் அவர் தரப்பில் கேட்கிறார்கள். அந்தக் காலத்தில் சென்னைதான் தென்னிந்தியா மொழிகளுக்கான தலைமையிடமாக இருந்தது.

தற்போதும் பல மொழிப் படங்களின் வேலை சென்னையில் நடந்து வருகிறது. அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, தமிழ்ப் படத்தின் வேலைகள் மட்டும் இங்கு நடந்தால் மற்றவர்களின் தொழில் எப்படி நடக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதனிடையே, தமிழ்ப் பெண் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளாராம். அந்தப் பெண் யார் எப்போது திருமணம் நடக்கும் என்ற விவரத்தை ஜனவரி 2019ல் அறிவிக்க உள்ளதாகவும் விஷால் சொல்லியிருக்கிறார்.

Read Previous

‘காளி’ – மீண்டும் அம்மா சென்டிமென்ட்டில் விஜய் ஆண்டனி

Read Next

காளி – விமர்சனம்

Most Popular