‘வந்தே மாதரம் ‘ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெயர் பெற்ற பரத் பாலா இயக்கி வரும் படம் ‘மரியான்’.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசைமைக்கிறார்.
தனுஷ் ஜோடியாக பார்வதி நடிக்க தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி , சலீம் குமார் ஆகியோருடன் விநாயகம் , ஜெகன் , அங்கூர் விகால் , உமா ரியாஸ் நடித்துள்ளனர் .
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் ‘ Johny Mad Dog ‘ என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளரும் ஐரோப்பாவின் மிக பெரிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான Marc Koninckx இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் .
சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன் , போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா சாவா என்று சவாலை எதிர்நோக்கி இருக்கின்றான். அந்த சவால்களை அவன் முறியடித்து தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெறும் கதை தான் ‘ மரியான் .
இந்த பயணத்தில் அவனுக்கு துணையாகவும் , இணையாகவும் இருப்பது அவனது காதலும் அவனது வலிமையான காதலை பற்றிய நினைவுகளும் தான்.
கடலோர மீனவ கிராமங்களிலும் கடினமான ஆப்ரிக்க காடுகளிலும் , பாலைவனத்திலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.