நாகராஜசோழன் எம்.எ.எம்.எல்.ஏ. – இசை வெளியீடு

amaithipadai-2-audio-release

யக்குனர் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் 25வது படமாகவும், இயக்குனர் மணிவண்ணனின் 50வது படமாகவும், சத்யராஜின் 200வது படமாகவும்  விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘நாகராஜசோழன் எம்.எ.எம்.எல்.ஏ. – அமைதிப் படை -2’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை,  கிரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் எண்ணற்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இயக்குனர்கள் கே. பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகரன், வசந்த், அமீர், சுந்தர் சி, எஸ்.பி. ஜனநாதன், ராம், சாமி, சுசீந்திரன், டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, பி.எல். தேனப்பன், வி. ராமதாஸ், நடிகர்கள் சிவகுமார், ஸ்ரீகாந்த், விஜய் சேதுபதி, சிபிராஜ், ஷக்தி நடிகைகள் நமீதா, கஸ்தூரி,  சந்தியா, சுஜிபாலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைதிப்படை 2 ன் இயக்குனர் மணிவண்ணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், ஒளிப்பதிவாளர் டி. சங்கர், பாடலாசிரியர் நா. முத்துககுமார், எடிட்டர் சுதர்சன், நட்சத்திரங்கள் சத்யராஜ், சீமான், ரகுவண்ணன், கோமல் சர்மா, மிருதுளா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் கே. பாக்யராஜ்,  பெற்றுக் கொண்டனர். டிரைலரை இயக்குனர் சுந்தர் .சி வெளியிட நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை நமீதா பெற்றுக் கொண்டனர்.

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, எஸ். ரவிச்சந்திரன் மக்கள் தொடர்பாளர் ஏ. ஜான் அனைவரையும் வரவேற்றனர்.

Read Previous

‘கோச்சடையான்’ டப்பிங் பேசிய ரஜினிகாந்த்

Read Next

என்னை இயக்குனராக்கிய இளையராஜா – மணிவண்ணன்