‘Pair’ இல்லை, ஆனால் ‘பேர்’ இருக்கு – சரத்குமார்

chennaiyil oru naal success_00001

‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையொட்டி அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சரத்குமார். கூடவே நடிகர்கள் சேரன், பிரசன்னா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் லிஸ்டின் ஆகியோரும் அவர்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சரத்குமார் அளித்த பேட்டியிலிருந்து,

“இந்த படத்துல எனக்கு ‘pair’ (ஜோடி) இல்லை, ஆனால்  ‘பேர் ‘கிடைச்சிருக்கு. படம் நல்லா இருக்குன்னு ரசிகர்களோட வாய்ப் பேச்சு வழியாவே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிட்டு வருது.

தமிழ்நாடு முழுக்க 235 தியேட்டர்கள்ல படம் வெற்றிகரமா நல்ல வசூலோட ஓடிட்டிருக்கு.   நல்ல படத்தைக் கொடுத்தோங்கற பெருமையும் கிடைச்சிருக்கு, நல்ல வெற்றியும் கிடைச்சிருக்கு.

உடல் உறுப்பு தானத்தை பத்தின படம், நல்ல கருத்தோட சொல்லியிருக்கோம்னு எல்லோரும் பாராட்டறாங்க. இந்த படத்தோட வெற்றி இதை மாதிரி தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்கற ஆசையை ஏற்படுத்தியிருக்கு.

மலையாளப் படம் பார்த்த உடனேயே இந்த படத்தோட டைரக்டர் பிரகாஷ்ராஜ் நடிச்சிருக்கிற கேரக்டரைதான் என்னை பண்ண சொன்னாரு. அப்புறம் சேரன் கேரக்டர் பண்ணலாமான்னு யோசிச்சன். ஆனால் , சேரன் பண்ணியிருக்கிற கேரக்டரை அவர் பண்ணால்தான் நல்லா இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க.

அப்புறம் யோசிச்சி பார்த்ததுல, கமிஷனர் கேரக்டர்தான் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஏன்னா, அந்த கேரக்டர் ரொம்ப யதார்த்தமா இருந்தது பிடிச்சிருந்தது. என்னோட வழக்கமான நடிப்புல இருந்து அந்த கேரக்டர் ரொம்ப மாற்றமா இருந்ததா உணர்ந்தேன். ஒரு கன்ட்ரோல் ரூமுக்குள்ளயே இருந்தாலும், இந்த கேரக்டர் மூலமா ரசிகர்களை இம்ப்ரஸ் பண்ண முடியும்னு நினைச்சேன். அதுதான் இப்ப நடந்திருக்கு.

இந்த படத்தை இந்த அளவுக்கு வெற்றி பெற வச்ச ரசிகர்களுக்கு நன்றி,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சரத்குமார்.

Read Previous

காதல் + காமெடி = துள்ளி விளையாடு

Read Next

3டி-யில் ஜுராசிக் பார்க்