‘விஸ்வரூபம் – 2’ ஆகஸ்ட் 15 ரிலீஸ் ?

viswaroopam-imageகமல்ஹாசன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் ‘விஸ்வரூபம்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம் -2’ திரைப்படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போதே கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தின் பல காட்சிகளை எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள்.

முதல் பாகத்தின் கதை அமெரிக்காவிலும், ஆப்கனிஸ்தானிலும் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகம் இந்தியாவில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளதால், அந்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததும், மற்ற பணிகளையும் முடித்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று ‘விஸ்வரூபம் – 2’  படத்தை வெளியிட கமல் முடிவெடுத்துள்ளார் என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

3டி-யில் ஜுராசிக் பார்க்

Read Next

‘முள்ளும் மலரும்’ பார்த்து அடிக்க வந்தார்கள் – இயக்குனர் மகேந்திரன்