பீட்சா இயக்குனரின் அடுத்த படம்…

pizza2012ம் ஆண்டு வெளிவந்து ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘பீட்சா’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் நல்ல விமர்சனத்துடன் , நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ‘பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

தனுஷ் நடித்த, பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களையும் தற்போது தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தையும் தயாரித்து வரும் நிறுவனம்தான் பைவ் ஸ்டார் மூவீஸ். இந்நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்புதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்.

இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. நாயகி மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

இந்தியன் போலீஸ் கதை ‘சிங்கம் 2’

Read Next

26ம் தேதி ‘யாருடா மகேஷ்’ ரிலீஸ்…

Most Popular