வித்தியாசமான வேடத்தில் விக்னேஷ்

vigneshடிகர் விக்னேஷ் தற்போது வித்தியாசமான வேடமேற்று ஒரு படத்தில் நடிக்கிறார்.  பெயரிடப் படாத                           இந்த படத்தை     காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் விக்னேஷ் தன்னை முழுவதுமாக மாற்றி கெட்டப் மற்றும் நடை, உடை,பாவனை எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு  கதாபாத்திரத்தின் தன்மைக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ராம்கிரிஸ் மிர்ணாலி சொன்ன கதையைக் கேட்டவுடன்  60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து  நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளது. இயக்குனர் ராம்கிரிஸ் மிர்ணாலி இந்த படத்தின் கதையை பல நடிகர்களிடம்  சொல்லி தேதி கேட்க அத்தனை நடிகர்களுமே நடிக்க மறுத்த கதையை விக்னேஷ்  கேட்டவுடன் ஒத்துக்கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க கொடைக்கானல், மூணார், கேரளாவில் சில பகுதிகளில்  படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  விக்னேஷ் நடிக்கும் படங்களிலேயே அதிக பொருட்செலவில்    இந்தப் படத்தைத் தயாரிக்கிறது காயன்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம். ரவி சினிவாசன் ஒளிப்பதிவு செய்ய, மற்ற கலைஞர்கள் தேர்வு  நடைபெற்றுக் கொண்டிருகிறது. திரைக்கதை தான் கதையின் நாயகன் என்கிறார் படத்தின் இயக்குனர்.

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

விளையாட்டு வீரனின் கதை ‘எதிர் நீச்சல்’

Most Popular