சொன்னபடியே செய்து காட்டினார் இயக்குனர் ராஜகுமாரன். ஆம். அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘திருமதி தமிழ்’ இன்று வெற்றிகரமாக 100வது நாளை கொண்டாடுகிறது.
எங்க என்றெல்லாம் கேட்கக் கூடாது…நீங்கள் இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்றுதான் படம் ஓ(ட்)டிக் கொண்டிருக்கும் தியேட்டர் பெயருடன் புகைப்படத்தை இணைத்துள்ளோம்.
படம் வெளியான போது பத்திரிகையாளர்களுக்கு படத்தைக் காட்டிய இயக்குனர் ராஜகுமாரனுக்கும், ஒரு மூத்த பத்திரிகையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, இந்த படத்தை “நான் 100 நாள் ஓட்டுவேன்” என்று சொன்னவர் (படிக்க – திருமதி தமிழ் – விமர்சனம்) இப்போது அதை செய்தும் காட்டியிருக்கிறார்.
இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்த படம் 100வது நாளை கொண்டாடுவது தமிழ்த் திரையுலகத்திற்கும், நமக்கும் ஒரு பெருமைதான்…
